சவ ஊர்வலங்களில்...
போதையில்,
உடைப்பெடுக்கும் கண்ணீருடன்
நடந்து செல்பவர்களின் துயரங்களை விட
அவனது குடிப்பழக்கமே
அதிகம் கவனிக்கப்படுகிறது.
# Doubting Thomas' are always surrounded us.

Read more...

நீங்கள் என்னை பலியிடலாம்...

நீங்கள் என்னை பலியிடலாம்...

எனக்கு வஞ்சகர்களை
அடையாளம் காண
சற்றே தாமதம் ஆகும்.

என் நண்பர்கள் கூட
நீண்ட நாட்களுக்கு பிறகு
புரிந்துகொண்டவர்களே..
புரிந்துகொள்ளப்பட்டவர்களே...

துரோகங்களை நேருக்கு நேர்
நிருபிப்பதில்லை.

காத்திருந்து, தருணம் பார்த்து,
நான் உறங்கும் பொழுதுகளில் கூட
என்னை வேட்டையாட காத்திருப்பவர்களை
நான் கவனத்தில் கொண்டதில்லை.

முகநக நட்பது முடிந்தபின்
கழுத்தறுக்க கத்தியை தீட்டுபவர்களை
கவனிக்காமல் இருந்ததுண்டு.

என் மீது கல்லெறியும் தருணத்திலும்
நான் சற்றே அசமந்தமாக இருந்ததுண்டு.

பூக்களுக்களுக்காக அலையாதிருப்பதை போலவே
முட்களையும் பொருட்படுத்துவதில்லை.

காத்திருக்கும் தருணங்களில்
வரவிருப்பது...
மலர் மாலையா? வளையமா?
என்பதை கூட யோசிக்கத் தவறியவன்.

மேற்சொன்ன
இத்தனை குற்றச்சாட்டுகள்
என் மீது இருப்பதால்...
நீங்கள் என்னை பலியிடலாம்.
ஆம். நீங்கள் என்னை பலியிடலாம்.

Read more...

நேரம்.

அலையும் விழிகளோடு
இரை கிடைத்த பொழுதுகளிலும்,
வெறித்த கண்களோடு
பசியாறும் பொழுதுகளிலும்
நான்,
''நானா''கவே
அழைக்கப்பட்டேன்.
நடத்தப்பட்டேன்.

உங்களுக்கு எளிதாய் ஒரு  இரை தேவையெனில்
எனக்கு புதிதாய் ஒரு பெயர்
சூட்டப்பட்டு...

நீங்கள் மிகக்கூட்டமாய்
பாதுகாப்பாக நின்று கொள்ளும் தருணத்தில்
என் கழுத்து நோக்கி
ஏதேனும் ஒரு பெயரிட்ட அரிவாள்
இறக்கப்படும்.

Read more...

அரசியலாமாம்

வளைந்தும்
நிமிர்ந்தும்
வாழுமாம்.

வளைந்த பின்
நிமிர்ந்தென்ன?
வாழ்ந்தென்ன?

Read more...

குழந்தையின் உலகம்

குழந்தை,
ஒரே ஒரு மினுக்குப் பூச்சியை
பாட்டிலில்
அடைத்ததில்...

குழந்தையின் உலகம்
வெளிச்சமானது,
மினுக்குபூச்சியின் உலகம்
அர்த்தமானது.

Read more...

புதிது

நெடுஞ்சாலை நடுவே
திரியும் நாயென
வழிபோக்கர்களுக்கு
சற்றும் அறிமுகமில்லாதது
என் காதல்.

வழிபோக்கர்கள்
தங்கள் பாதையில்
குறுக்கிட்டதாய்
என்ன என்னமோ
திட்டுகிறார்கள்...

காலங்காலமாக
இந்த பூமியில்
காதலும் நாய்க்குட்டிகளும்
எங்கும் திரிந்து
கொண்டுதானிருந்தது...

நெடுஞ்சாலைகளும்
வழிபோக்கர்களும் தான்
புதிது.

Read more...

மனசு

"பள்ளிக்கு

கூரை கட்டித்தர வழியில்லை"

என்ற பாட்டி தந்த

தொட்டிச் செடியில்

விரிகிறது...



குழந்தைகளுக்கான பெருநிழல்.

Read more...

என் பாதையில்...

வீடு வந்து சேர்ந்த பின்னும்

தோன்றிக் கொண்டேயிருக்கிறது.


முந்துகையில் தடுமாறியவன்

பத்திரமாய் சேர்ந்திருப்பானா?

Read more...

பின்தொடரும்...

புரியவில்லை...
 
என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்?
உங்களிடம்
எனக்கான கேள்விகள் இல்லை.


உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்
நிச்சயமாக என்னிடம் இல்லை.

இருந்தும்,
பின்தொடருகின்றன...

உங்கள் கேள்விகுறிகளும்
என் ஆச்சரிய குறிகளும்.

Read more...

நான்...

நீங்கள் 21 ம் நூற்றாண்டை
காட்டேச்களில் வரவேற்ற போது
ஆதிவாசி போல
நான் எங்கள் தூண்டிவீரன் திருவிழாவில்
திரிந்தேன்.

நீங்கள்
சாட்டிங்கில் டேட்டிங்கை பிக்ஸ் செய்த போது
நான் கருவேலங்காட்டில் காதலுற்று கிடந்தேன்.


பிறகு
நீங்கள் எல்லாம்
நகரங்களின் இடுக்குகளில், கழிப்பறைகளில் கூட
ஆண்களுடன் பெண்களுமாய்
குரூப் டிஷ்கஷனில் இருந்த போது
நான் குளக்கரையில் குளியல்களை
ரசித்துக் கொண்டிருந்தேன்.
...
...
உங்கள் hi-fi, cool, hurrey கூச்சல்களை
என்னால் விளங்கி கொள்ள முடியாத போது
உங்களில் ஒருத்தி சொன்னாள்,


'' சீ , போடா . . . காட்டான்".

Read more...

  © View koottani blog for the teachers by TAAK KILVELUR maintained by C.ARULSELVAM Thank you visit again

Back to TOP